*முந்தைய பதிவு- அயனமண்டலக்காடுகள்
2. சவன்னா(Savanna)
பரம்பல்
- பூமத்திய ரேகைப்பகுதியிலும் உப பூமத்திய ரேகைப்பகுதியிலும் காணப்படும்.(30° வடக்குத் தெற்குக்கிடையில்)
- அயனமண்டல மழைக்காடுகளுக்கும் அயனமண்டல பாலைவனங்களுக்கும் இடையில் காணப்படும்.
உ+ம்: மத்திய மற்றும் தென்னாபிரிக்கா, மேற்கிந்தியா, தென்னமெரிக்காவின் மத்திய பகுதி, வெனிசுலா, பிரேசிலின் கம்போஸ் புன்னிலம், கென்யா, சாம்பியா, சிம்பாபே, மொசாம்பிக், தன்சானியா, அங்கோலா, சயர், நைஜீரியா, கினியா, நைகர், ஆஜன்டினாவின் பம்பாஸ், ரஷ்யாவின் ஸ்டெப்ஸ், அவுஸ்திரேலியாவின் டவுன்ஸ்
காலநிலை
- ஆண்டு மழைவீழ்ச்சி: 300-500mm ; 500-1250mm (பருவகாலத்துக்குரியது)
- உயர் ஆவியாக்கம்
- 8-9 மாதங்களுக்கு உலர் காலநிலை காணப்படலாம்.
- சில காலங்களுக்கு கடும் வரட்சி.
- வேகக்காற்று வீசும்.
- நீண்ட கோடைக்காலமும் குறுகிய மாரி காலமும்.
தாவரங்கள்
- பரந்தளவில் உயரம் கூடிய புல்லினங்களும் இடையிடையே சிறிய மரங்களும் பற்றைச்செடிகளும் காணப்படும்.
- தடித்த மரப்பட்டை காணப்படும்.
- பல்வேறு வடிவம் கொண்ட இலைகளையுடைய தாவரங்கள் காணப்படும்.
- தீயிற்கு எதிர்ப்பான தாவரங்கள் காணப்படும்.
- முட்களைக்கொண்ட, சிறிய இலைப்பரப்பினை உடைய தாவரங்கள் காணப்படும்.
- வரட்சியைத் தாங்கக்கூடியவை.
- பருவகால மழையில் உடனடியாக வளரக்கூடியவை.
- புற்கள் மிருகங்களின் மேய்ச்சலைத் தாங்கக்கூடியவை.
உ+ம்: அகேஷியா, பயோபெப், புல் வகைகள்
விலங்குகள்
- பொதுவாக பெரிய முலையூட்டிகள்.
உ+ம்: காட்டெருமை, சிங்கம், Zebra, Hyena(கழுதைப்புலி), ஒட்டகச்சிவிங்கி, புலி
- இலையுண்ணிகள், பூச்சிகள்
- வரட்சிக்காலங்களில் பெருமளவு உணவும் நீரும் காணப்படும் இடங்களை நோக்கி இடம்பெயரும்.
தொடரும்....
அடுத்த பகுதியில்- பாலைவனங்கள் (Deserts)
-✍ஹட்டன் பிரவீனா.
0 Comments