Subscribe Us

header ads

ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமை

ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை

ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை என்பது அரசின் அதிகாரம் ஒன்று குவிக்கப்பட்டு அவ்வதிகாரம் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசிடம் மட்டும் காணப்படுமாயின் அது ஒற்றையாட்சி அரசியலமைப்பு எனப்படும். இங்கு அரசின் இறைமை அதிகாரம் தனியொரு தேசிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருப்பதனைக் கருதும். உலகின் பெரும்பாலான அரசுகள் ஒற்றையாட்சி முறையிலேயே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. உ+ம்:- பிரான்ஸ், பிரித்தானியா, பெல்ஜியம், இலங்கை, இத்தாலி, பின்லாந்து, டென்மார்க்
இவ் ஒற்றையாட்சி முறைமையில் பிராந்திய அரசுகள் உட்பட எந்தவொரு மாதிரியினதும் இருப்பு, உருவாக்கம், நீக்கம் என்பன மத்திய அரசின் விருப்பத்திலேயே தங்கியிருப்பதோடு அந்த நிறுவனங்களின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்களை விரிவாக்குவதற்கும் குறைப்பதற்கும் அதிகாரம் காணப்படுகிறது. 

ஒற்றையாட்சி அரசியலமைப்பின் பண்புகள்

  • ஒரு தனி மத்திய அரசாங்கத்தில் இறைமை அதிகாரம் செறிந்திருத்தல்.

  • ஒற்றை நிர்வாக, மற்றும் நீதி முறைமைகள்

  • தனித்த அரசியலமைப்பு

  • எளிமையானதும், வினைத்திறனானதுமாகும்.

  • மத்திய அரசு ஒருதலைபட்சமாக யாப்பினை மாற்ற முடியும்.

  • தனி இனங்களை உடைய நாடுகளுக்கு பொருத்தமானது.

  • நிலப்பரப்பால் சிறிய நாடுகளுக்கு பொருத்தமானது.

  • ஆயுதப்படைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் காணப்படும்.

  • அரசாங்கத்திற்கு பொறுப்பு கூறும் பண்பு காணப்படும்.

  • ஒற்றைக்குடியுரிமையும், சட்டமுறைமையும் நீதித்துறையும் சிவில் சேவையும் நிலவுதல்.

  • மத்திய அரசினால் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட உள்ளூராட்சி நிறுவனங்கள் காணப்படும். 

  • தேசிய அரசியலை நோக்கமாகக் கொண்டு தேசிய ஒருமைப்பாட்டினை விருத்தி செய்வதற்கு உதவுகிறது. 

ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அனுகூலங்கள்

  • அரசியலமைப்பினை மாற்றுவது இலகு.

  • நாடு முழுவதும் ஒரே மாதிரியான நிர்வாகம் நிலவும்

  • அரசாங்க முடிவுகளை எட்டுவது இலகு.

  • தனி இன நாடுகளுக்குப் பொருந்தும்.

  • சிறிய அரசுகளுக்குப் பொருந்தும்.

  • தேசிய உணர்வு மற்றும் ஒருமைப்பாடு மேலோங்கிக் காணப்படும்.

  • நெருக்கடி கால சூழ்நிலைகளை எதிர்கொள்வது இலகு.

  • அரசாங்க செலவீனம் குறைவு.

ஒற்றையாட்சி அரசியலமைப்பின் பிரதிகூலங்கள்

  • பல சமூகங்கள் இணைந்து வாழும் நாடுகளுக்கு பொருத்தமற்றது.

  • அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட வாய்ப்புண்டு.

  • நிலப்பரப்பில் பெரிய அரசுகளுக்கு பொருந்தாது.

  • பிரதேசங்கள் மற்றும் நாட்டின் தேவைகளுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படும். 

சமஷ்டியாட்சி அரசியலமைப்பு முறைமை:


-✍ஹட்டன் பிரவீனா
  


Post a Comment

0 Comments