Subscribe Us

header ads

அயனமண்டலக்காடுகள் (Tropical Forests)



*முந்தைய பதிவு- உயிர்ப்பெருந்திணிவுகள்- அறிமுகம்

1. அயனமண்டலக்காடுகள் (Tropical Forests)



அயனமண்டல மழைக்காடுகள் (Tropical Rain Forests)

பரம்பல்

பூமத்தியரேகையைச் சூழவும் உப பூமத்தியரேகைப் பகுதியிலும் பரம்பியவை.

மலேசியா, சயர், மேற்கு ஆபிரிக்கா, மியன்மார், கம்போடியா, லாவோஸ், வட வியட்னாம்,  தாய்லாந்து, வட அவுஸ்திரேலியா, நியுகினியா, மத்திய இந்தியா.
உ+ம்: அமேசன் காடுகள், கொங்கோ காடுகள், இந்தோ-மலாயன் காடுகள், சிங்கராஜ வனம்

காலநிலை

  • ஆண்டு மழைவீழ்ச்சி 2000-4000mm சீரானது.

  • வெப்பநிலை 25°- 29°C 

  • சாரீரப்பதன் 75%-90%

தாவரப்பண்புகள்

  • உயிர்ப்பல்வகைமை அதிகம்.

  • தாவரங்கள் தெளிவான படைகொள்கைகளைக்காட்டும்.

வெளிப்படை- 35-45m உயரமான மரங்கள்
விதானப்படை- 25-30m உயரமான மரங்கள்
உபவிதானப்படை- 10-15m உயரமான மரங்கள்
பற்றைத்தாவரப்படை- 5m உயரமான மரங்கள்

  • என்றும் பசுமையான தாவரங்கள்.

  • அதிகமான கீழ்நில வளரிகள் காணப்படும்.

  • பெருமரங்களில் மேலொட்டித் தாவரங்கள் அதிகம் - ஓர்கிட்(Orchid)

  • ஏறுதாவரங்கள் அதிகம்.

  • தண்டில் பூக்கும், காய்க்கும் தாவரங்கள்.

  • தாவரங்கள் நெருக்கமாகவும் உயரமாகவும் வளரும்.

உ+ம்: மகோகனி, கருங்காலி, நாகமரம், தாழை, தேக்கு, சந்தனம், அகேஷியா, யூக்கலிப்டஸ், மூங்கில்

விலங்குகள்

  • அதிக விலங்குப் பல்வகைமை காணப்படும்.

  • முப்பரிமாண சூழலுக்கு இசைவாக்கமுடையவை.

  • இலகுவில் வெளித்தெரிவதில்லை.

உ+ம்: குரங்கு வகைகள், ஊர்வன, விஷ ஜந்துகள்



அயனமண்டல உலர்/மலைக் காடுகள் (Tropical Dry Forests)

பரம்பல்

தென்கிழக்காசிய நாடுகள், இலங்கையின் உலர்வலயம், வட கிழக்கிந்தியா

காலநிலை

  • ஆண்டு மழைவீழ்ச்சி 1250-2000mm பருவகாலத்துக்குரியது.
  • உலர் காலநிலையும் ஈர காலநிலையும் தெளிவானவை.
  • நவம்பர் முதல் ஜனவரி வரை அதிக மழை.

தாவரப்பண்புகள்

  • உயிர்ப்பல்வகைமை குறைவு.

  • பெரும்பாலும் என்றும் பசுமையானவை.

  • சில, உலர் காலநிலையில் இலைகளை உதிர்த்தும் - மியன்மார் நாட்டுத் தேக்கு மரங்கள்.

  • தெளிவான படைகொள்ளல் இல்லை.

  • தாவரப்படையில் பெருமளவு தாவரங்கள் காணப்படும். - தரைப்படை மழைக்காலங்களில் மட்டும் விருத்தியாகும். 

  • மேலொட்டித்தாவரங்கள் குறைவு.

  • முட்புதர்கள் மற்றும் சாற்றுப்பிடியான தாவரங்கள் அதிகம்.

விலங்குகள்

பருமனில் பெரிய விலங்குகளைக் காணலாம்.

உ+ம்: முலையூட்டிகள், ஊர்வன, பறவைகள், பூச்சிகள்  


தொடரும்..... 
அடுத்த பகுதியில்- சவன்னா(Savanna)


-✍ஹட்டன் பிரவீனா.

Post a Comment

0 Comments