உயிர்ப்பெருந்திணிவுகள்- அறிமுகம்.
அதிகளவு காணப்படும் தாவர வர்க்கங்களால் பாகுபடுத்தப்படுவதும், குறித்த பிரதேசத்திற்குரிய தற்சிறப்பான காலநிலைக்காரணிகளாலும், அக்குறித்த சூழலுக்கான அங்கிகளின் இசைவாக்கங்களாலும் சிறப்பிக்கப்படுவதுமான உலகின் பெரும் பரப்புகளில் வியாபித்துள்ள பிரதான சூழற்தொகுதிகளே "உயிர்ப்பெருந்திணிவுகள்" என்று வரையறுக்கப்படும்.
பிரதான தரைக்குரிய உயிர்ப்பெருந்திணிவுகளாக கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. அயனமண்டலக் காடுகள்- அயனமண்டல மழைக்காடுகள், அயனமண்டல உலர்க்காடுகள்(மலைக்காடு)
2. சவன்னா
3. பாலைவனங்கள்
4. பரட்டைக்காடுகள்
5. இடைவெப்பவலயப் புன்னிலங்கள்
6. இடைவெப்பவலய அகன்ற இலைக்காடுகள்
7. தைகா
8. துந்திரா
உயிர்ப்பெருந்திணிவுகளின் பரம்பலைத் தீர்மானிக்கும் காரணிகளாக,
- வெப்பநிலை
- மழைவீழ்ச்சி
- ஒளிச்செறிவு
என்பவற்றை நோக்கலாம்.
தொடரும்.....
அடுத்த பதிவில்- அயனமண்டலக்காடுகள்
-✍ஹட்டன் பிரவீனா.
0 Comments