சமஷ்டியாட்சி அரசியலமைப்பு முறைமை
ஒரு நாட்டின் அரசியல் அதிகாரத்தைப் பிரயோகிப்பதில் மத்திய அரசு மட்டுமின்றி பிரதேச அரசுகளும் பங்குபற்றும் வகையில் யாப்பினூடாக அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பின் அவ் அரசியலமைப்பு முறைமை சமஷ்டியாட்சி அரசியலமைப்பு முறைமை எனப்படும். சமஷ்டி அரசியலமைப்பினுள் சட்ட ரீதியான இறைமை மத்திய அரசாங்கம் மற்றும் பிராந்திய/மாகாணங்களுக்கிடையில் பங்கிடப்படும். இதன்மூலம் பிராந்தியங்களின் ஒப்பீட்டு ரீதியான சுயாதீன நிலை பாதுகாக்கப்படும். உ+ம்: அமெரிக்கா, கனடா, ஜேர்மன், அவுஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து.
சமஷ்டி அரசியலமைப்பின் பண்புகள்
- ஒன்றுக்கொன்று வேறுபட்ட இருவகை அரசாங்க மட்டங்கள் காணப்படும்.
- பல மட்டங்களிலான அரசாங்கங்களுக்கிடையில் செங்குத்தான அதிகாரப்பகிர்வினைக் கொண்டதாகும்.
- அதிகாரப்பங்கீடு
- அரசியல் யாப்பின் மேன்மை
- எழுதப்பட்ட நெகிழா அரசியல் யாப்பு
- இரட்டைக் குடியுரிமை
- பக்கம் சாரா வலுவான நீதித்துறை
- பன்மை சமூகங்களுக்கு அதிகம் பொருந்தும்
- மத்திய அரசாங்கத்தின் சட்டத்துறை ஈரவை கொள்கையின் படி உருவாக்கப்பட்டிருக்கும்
- மத்திய அரசுக்கும் பிராந்திய அரசுகளுக்கும் தனித்தனியான விடயங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கும்.
- பல்வேறு இனக்குழுக்களை ஓர் அரசியல் முறைமைக்குள் ஒன்றிணைக்க உதவுகிறது.
- பிராந்திய அபிலாசைகளுக்கு அரசியலமைப்புசார் உறுதியினை வழங்க முடியும்.
- தனியாள் சுதந்திரம் பாதுகாக்கப்படும்.
- பரந்தளவான அரசுகளை ஒழுங்கமைத்துக்கொள்ள உதவுகிறது.
- நிலப்பரப்பால் பாரிய அரசுகளுக்குப் பொருத்தமானது.
- மத்திய அரசின் எதேச்சதிகாரம் கட்டுப்படுத்தப்படும்.
- சிறுபான்மை இனங்கள் தங்களுடைய பிரதேசங்களில் அதிகாரம் பெற்று வாழ முடியும்.
- பிரதேச ரீதியான அபிவிருத்தி ஏற்படும்.
- அரசாங்க பிரிவினை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
- அரசினுள் நேர்மயப்படுத்தலுக்கான அழுத்தம் குறைவடையும்.
- ஒருமுக ஆட்சியினை ஏற்படுத்த இயலாது.
- நெகிழா யாப்பு முறை என்பதால் காமலமாற்றத்திற்கேற்றவாறு மாற்றியமைப்பது கடினம்.
- செயற்றிறனற்ற வலு குறைந்த அரசாங்கங்கள்.
ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமை:
-✍ஹட்டன் பிரவீனா
0 Comments