முந்தைய பதிவில் இடைவெப்பவலயப் புன்னிலங்கள்:
இடைவெப்பவலய காடுகள்
இடைவெப்பவலயக்காடுகள் காலநிலை மற்றும் தாவரங்களின் அடிப்படையில் இருவகைப்படும்.
- இடைவெப்பவலய என்றும் பசுமையான காடுகள்
- இடைவெப்பவலய இலையுதிர் காடுகள்
பரம்பல்
- வட அரைக்கோளம், வட அமெரிக்கக் கிழக்குப் பிரதேசம், கிழக்கு ஐரோப்பா, பிரித்தானியா, கனடா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா
காலநிலை
- வெப்பம் கூடிய வரண்ட கோடைகாலமும்(30°C) குளிர்காலமும் (0°C) காணப்படும்.
- ஆண்டு மழைவீழ்ச்சி: 700-2000mm
- வருடம் முழுவதும் பரவலான மழை.
- ஒரு வருடத்தில் நான்கு பருவகாலங்கள் காணப்படும்.
தாவரங்கள்
- அயன காடுகள் போன்று பல்வகைமை இங்கு இராது.
- தாவர அடர்த்தி குறைவு.
உயரமான மரங்கள்.
உ+ம்: Oak, Brich
- என்றும் பசுமையான தாவரங்களும், இலையுதிர்க்கும் தாவரங்களும் காணப்படும்.
உ+ம்: யூக்கலிப்டஸ்
- இலைகள் அகன்றவையாகக் காணப்படும்.
- மேலொட்டிகள் காணப்படும்.
விலங்குகள்
- குளிர்காலங்களில் பெரும்பாலான முலையூட்டிகள் ஒளிந்துகொள்ளும்.
உ+ம்: மான் வகைகள், குடிபெயரும் பறவைகள், நீர் வாழ் உயிர்கள்.
தொடரும்....
அடுத்த பகுதியில் தைகா(Taiga)
-✍ஹட்டன் பிரவீனா.
0 Comments