Subscribe Us

header ads

தைகா/ ஊசியிலைக்காடுகள் (Taiga)

முந்தைய பதிவில்- இடைவெப்பவலயக் காடுகள்

தைகா (Taiga) - கூம்பு(ளி)க்காடுகள்/ஊசியிலைக்காடுகள்



பரம்பல்

  • இடைவெப்பவலயத்தின் மிகக்குளிரான வடக்குப்பிரதேசங்களில் வடதுருவத்தை அண்மித்த பிரதேசங்கள்

உ+ம்: வட அமெரிக்கா, கனடா, வட ஐரோப்பா, ரஷ்யா

  • வட அமெரிக்காவின் மேற்குக் கரையோரத்திலிருந்து கிழக்குக் கரையோரம் வரையிலான பகுதி, வட ஐரோப்பாவின் மேற்குக் கரையோரத்திலிருந்து கிழக்காசியாவின் கரை வரையுள்ள நீண்டு ஒடுங்கிய பரப்பில் பரம்பியுள்ளது. 

  • மேற்கு ஐரோப்பாவின் 60° வட அகலக்கோடு வரையாக தெற்காகவும் கிழக்காசியாவில் 50° வட அகலக்கோடு வரை தெற்காகவும் கிழக்கு அமெரிக்காவில் 40° வட அகலக்கோடு வரை தெற்காகவும் பரம்பியுள்ளது.

காலநிலை

  • வருடம் முழுவதும் பரவலான மழைவீழ்ச்சி

  • ஆண்டு மழைவீழ்ச்சி: 300-700mm படிவு வீழ்ச்சி பனிப்படிவுகளாக் கிடைக்கும்.

  • நீண்ட குளிர்காலமும்(-70°C), குறுகிய கோடையும்(30°C)

  • குளிர்காலம் முழுவதும் தரையானது பனிப்படுக்கைகளால் போர்த்தப்பட்டிருக்கும்.

தாவரங்கள்

  • தடிப்பான முட்களுடன் கூடிய இலைகள்.

  • என்றும் பசுமையான தாவரங்கள்.

  • தாவரங்கள் கூம்பு வடிவில் காணப்படும்.

  • கீழ் நோக்கி நீண்ட நுனியுடைய ஊசியிலைகள்.

உ+ம்: பைன், ஸ்பூஸ், லார்ச், பர்ச், சைப்ரஸ், சீடர், பொப்லர்.

விலங்குகள்

வட அமெரிக்க மான், சைபீரிய புலி, கபிலக்கரடி, பூச்சியினங்கள், ஈரூடகவாழிகள்.


தொடரும்.... 
அடுத்த பதிவில், துந்திரா (Tundra)



-✍ஹட்டன் பிரவீனா.

Post a Comment

0 Comments