முந்தைய பதிவு: தைகா/ ஊசியிலைக்காடுகள் (Taiga)
துந்திரா( Tundra)
பரம்பல்
- முனைவுப்பகுதிகள் மற்றும் உயர்வான மலைப்பகுதிகள்
- Taiga விற்கு வடக்காக வடதுருவத்தில் வடக்கு சைபீரியாவில், வட கனடா, ஐஸ்லாந்து, தரை மேற்பரப்பில் 20%
காலநிலை
- 2-4 மாதங்களுக்கு குறுகிய கால சூரிய ஒளி.
- மிகக்குறுகிய கோடைகாலம்(10°C)
- உயர் பனிப்பொழிவு- வருடத்தில் 10 மாதங்கள் பனிக்கட்டி காணப்படும்; திரவநீர் இல்லை.
- ஆண்டு மழைவீழ்ச்சி: 200-600mm
தாவரங்கள்
- இனப்பல்வகைமை மிகக் குறைவு.
- பாசிகள், கோரைப்புற்கள், பூண்டுத்தாவரங்கள், நாணல் என்பன விரைவாக வளர்ந்து பெருகும்.
விலங்குகள்
- பென்குயின், துருவக்கரடி, கலைமான், நரி
- வெப்பக்காலங்களில் பல பறவைகள் கூடு கட்டுவதற்காக இப்பிரதேசங்களுக்கு இடம்பெயருகின்றன.
உயிர்ப்பெருந்திணிவுகள் பகுதி இத்துடன் முடிவடைகிறது.
மேற்கண்ட உயிர்ப்பெருந்திணிவுகளுக்குப் புறம்பாக உலகின் அதிகமான பகுதிகளில் காணப்படும் மற்றொரு உயிர்ப்பெருந்திணிவாக ஈரநிலங்களைக் காணலாம். அமெரிக்காவின் பென்டனல், அமேசன் வடிநிலம், சுண்டர்பான்என்பவற்றை உதாரணமாகக் காட்டலாம். உலகின் சகல காலநிலைப் பகுதிகளிலும் ஈரநிலங்கள் காணப்படுகின்றன.
-✍ஹட்டன் பிரவீனா.
0 Comments