Subscribe Us

header ads

பாலைவனங்கள் (Deserts)

முந்தைய பதிவு- சவன்னா( Savanna)


3. பாலைவனங்கள் (Deserts)



பாலைவனங்களை வெப்பப்பாலைவனம் 
குளிர்ப்பாலைவனம்
என இருவகைப்படுத்தலாம்.

பரம்பல்

  • பூமத்திய ரேகையிலிருந்து 30°-40° வடக்காகவும் 30°-40° தெற்காகவுமான அகலக்கோட்டுப்பகுதிகளில் வியாபித்துக் காணப்படும்.

  • சில கண்டங்களில் வேறு அகலாங்குகளிலும் காணப்படும்- வட மத்திய ஆசியாவின் கோபி பாலைவனம்.

உ+ம்: ஐக்கிய அமெரிக்காவின் கலிஃபோர்னியா, அரிசோனா,  அமெரிக்காவின் அடகாமா, ஆபிரிக்காவின் சஹாரா, கலஹாரி, நமீபியா, அராபியப்பகுதி, தார், மேற்கு அவுஸ்திரேலியா, கோபி, துர்கிஸ்தான், ஐக்கிய அமெரிக்க நவேடா.

காலநிலை

  • ஆண்டு மழைவீழ்ச்சி: 300mm க்கும் குறைவு.

  • மிக உயர் வெப்பநிலை-
1)வெப்பப்பாலைவனங்களில் 50°C ஐ விடவும் கூடலாம்.
2)குளிர்ப்பாலைவனங்களில் (-30)C ஐ விடவும் குறையலாம்.

  • வெப்பநிலையானது பருவகால மாற்றங்களையும் நாளாந்த அடிப்படையிலான மாற்றங்களையும் காட்டும்.

தாவரங்கள்

  • தாவர அடர்த்தி குறைவு.

  • பாசி போன்ற சிறிய தாவரங்களைக் காணலாம். 
உ+ம்: கோமாரிகா

  • சிறியளவிலான தாவர மூடுபடை காணப்படும்.

  • திறந்த தரையின் அளவு அதிகம்.

  • பெரும்பாலானவை ஆண்டுத்தாவரங்கள்.

  • நீண்ட வேர்களைக் கொண்ட தாவரங்கள், ஆழமாக ஊடுறுவக்கூடியவை.

  • சாற்றுப்பிடிப்பான தாவரங்கள்
உ+ம்: Cacti

  • தாவரங்களில் வறள்நில இசைவுகள் காணப்படும். 

*நீரை சேமிக்கக்கூடியவை
*இலைப்பரப்பு சிறிது
*இலைகளில் முட்கள் காணப்படும்.(பௌதிகத்தடை)
*இலைகளில் நச்சுப்பதார்த்தங்கள் காணப்படும்( இரசாயனத்தடை)

விலங்குகள்
  
  • பெரும்பாலானவை இராக்காலத்துக்கு உரியவை.

  • நீர்க்காப்பு பொதுவான இசைவாக்கமாகும்.

  • சில, வித்துக்களின் காபோவைதரேற்று அனுசேபத்தின் மூலம் நீரைத் தோற்றுவித்து பயன்படுத்துபவை.

உ+ம்: பாம்பு, பல்லி, தேள், எறும்பு, வண்டு, குடிபெயரும் பறவைகள், வித்துக்களைத் தின்னும் கொறி உயிர்கள்.

*குளிர்ப்பாலைவனங்கள்

பரம்பல்

  • 254mm க்கும் குறைவான பனிக்கலப்பு காணப்படும் பாலைவனங்களே குளிர்ப்பாலைவனங்களாகும்.
உ+ம்: கோபி, அட்டகாமா, இடாகோ, நெவோடா, நமீப், தக்லமகான், துருக்கி 

தாவரங்கள்

  • குறிப்பிடத்தக்க தாவரப்பரம்பல் இங்கு இல்லை.

விலங்குகள்

  • Lizards, Gazelle எனும் முயல்வகை, Gerbil எனும் எலிவகை




தொடரும்.... 
அடுத்த பதிவில் - பரட்டைக்காடுகள் (Chaparrals)


-✍ஹட்டன் பிரவீனா.

Post a Comment

0 Comments