முந்தைய பதிவு பாலைவனங்கள்(Deserts)
4. பரட்டைக்காடுகள் (Chaparrals)
பரம்பல்
- பல கண்டங்களில் நடு அகலாங்குகளிலுள்ள கரையோரங்களில் காணப்படும். வடக்குத் தெற்காக பூமத்திய ரேகைக்கு 30°அப்பால் இடைவெப்பவலயத்தில் பரம்பியிருக்கும்.
- வட அமெரிக்காவில் கலிஃபோர்னியா மற்றும் ஃபுளோரிடா, ஸ்பெயின், சிலி, பிரான்ஸ்ஸின் தென்பகுதி, ஆபிரிக்காவின் தெற்கு, கேப்டவுன்
காலநிலை
- ஆண்டு மழைவீழ்ச்சி: 300-500mm
- மழைவீழ்ச்சி பருவகாலத்துக்குரியது
- ஈரமான, மழையுடனான குளிர்காலத்தையும், வெப்பமான உலர்ந்த நீண்ட கோடைகாலத்தையும் கொண்டிருக்கும்.
- ஈரமான குளிர் காலம் 10-12°C
- வெப்பமான உலர்ந்த நீண்ட கோடைகாலம் 30°C (40°C வரை கூடலாம்)
தாவரங்கள்
- தாவரப்பல்வகைமை அதிகம்.
- புற்கள், பூண்டுகள், செடிகள், சிறிய மரங்கள் ஆட்சியானவை. (புதர்கள்)
- வரட்சியைத் தாங்கக்கூடியன.
- தடித்த மரவுரியைக் கொண்டன.
- சிறிய இலைகளையுடைய தாவரங்கள்.
- மெழுகினால் மூடப்பட்ட இலைகளையுடைய தாவரங்கள். (ஆவியுயிர்ப்பைக் குறைப்பதற்கு)
- நீரை உறிஞ்சக்கூடிய வகையில் நீண்ட முட்கள் காணப்படும்.
உ+ம்: பைன், சீடர், ஓக், ரோஸ்மர், டியூலிப், யூக்கலிப்டஸ்.
விலங்குகள்
மான்கள், ஆடுகள், சிறிய முலையூட்டிகள், ஊர்வன, பூச்சிகள், வண்ணப் பறவைகள்.
தொடரும்....
அடுத்த பதிவில்- இடைவெப்பவலயப் புன்னிலங்கள்.
-✍ஹட்டன் பிரவீனா.
0 Comments