Subscribe Us

header ads

நீ உருவாக்கி, உன்னையே ஆளுகின்ற பணம் எனும் வெற்றுத்தாள்கள்!


          ☆காசு!பணம்!துட்டு!Money!Money!



அறிவிலிகளே! பணம் ஒரு பாடா?
அன்பு மறந்து பண்பு மறந்து
மனிதரை மனிதர் கொச்சப்படுத்தி
வாழுகின்ற இவ்வாழ்விலே
எங்கிருந்து வந்தது பணம்?
மூளையைக் கழுவி தேடுங்கள்...

நீ உருவாக்கிய வெற்றுக்காகிதம்
உன்னையே ஆளுகிறதே,
கண்ணைத் திறந்து பார்
நீ குருடன் என்று தெரியும்.
நீ படைத்த ஒன்றுக்கு அடிமையாய்
இருக்கிறாயே, புரியுதா உனக்கு?

சிரிக்கத்தானடா செய்யும்
அது உன்னைப் பார்த்து -நீதான்
காலில் இருந்த செருப்பை
தலையில் செருகிக் கொண்டாயே!
கொஞ்சம் அண்ணாந்து பாரடா
உன் தலை எவ்வளவு அழுக்கென்று!

பணத்திற்காக அலைகிறாயே-கீழே
விழின் கண்ணில் ஒற்றுகிறாய்.
முட்டாளே! முன்னால் பாரடா
உன் தாய் இருக்கிறாள்!
தாயைத்தூக்கி தலையில் வை!
பணத்தைத் தூக்கி காலில் வை!

உனக்கு உறவுகள் எதுவரை?
உன்னிடம் பணம் இருக்கும் வரை.
ஆசை மனைவி எதுவரை?
கேட்டபோது பணம் தரும் வரை.
பெற்ற குழந்தை எதுவரை?
கேட்டது வாங்கித்தரும் வரை.

இதுதானடா வாழ்க்கை,
நீ உயிர் கொடுத்த காகிதம்
உன்னுயிரைக் குடிப்பது
இன்றுனக்குத் தெரியாதடா!
நிதர்சனம் புரியாமல் அடிமை
மாடாய் வாழ்ந்து செத்துமடி!

பணம் சூழ்ந்த இவ்வுலகிலே
வேறெதற்கு இடமுண்டு...
விரையுங்கள் தோழர்களே!
பதுக்குங்கள் நோட்டுகளை,
அதைத்தான் புசிக்கவிருக்கிறது
நாளைய பணப்பேய் சமுதாயம்!!!

காசு! பணம்! துட்டு! Money Money!
காசு! பணம்! துட்டு! Money Money!


பிரவீனா-ஹட்டன்





Post a Comment

0 Comments