Subscribe Us

header ads

காதலால் கட்டிச்சென்றாயே -கவிதை


                  ☆கட்டிப்போட்டாயோ நீ!



அனைத்து உறவுகளும் என்
வசமிருந்த போது  நீ மட்டும் போதுமென வாழ்ந்த என் வாழ்க்கையில்
இன்று எந்த உறவுக்கும் இடமில்லை என ஆகும் போது நீயும் இடம் மாறிப் போனதேனோ என் செல்வமே! 

தனிமையில் தவிக்கிறேன் என்று
சொல்வதைக்காட்டிலும் தனிமை
என்னால் தவிக்கிறது என்பதே
உண்மையாகிப்போன நாட்களிலே
நீயும் நானும் சேர்ந்திருந்த தருணம்
தீயில் விழுந்த புழுவாய் எனையாக்கியது!

புரண்டு புரண்டு அழுதாலும் உன்
மழலை மாறா புன்னகை மட்டும்
கன்னங்களில் முத்தமிட்டு செல்ல
நீ சென்ற பாதை தேடி ஓடி வர
கால்களில் நீயிட்ட சங்கிலியும்
எனையிழுத்து கட்டிப்போடுகிறது
கட்டிலின் கால்களிலே தினம் தினம்!

பிரவீனா-ஹட்டன்

Post a Comment

0 Comments