Subscribe Us

header ads

திருமண காண்டம்- மாப்பிள்ளை தேடும் படலம்





1)பெண்:-சொந்த வாகனம் இருக்க வேண்டும்.
👉வாகனம் இல்லை.
நீ போகலாம்; வருடம் போனது

2)பெண்:- தன் பெயரில் சொந்த வீடு இருக்க வேண்டும்.
👉வாகனம் இருக்கிறது, வீடு வாடகைதான்.
நீ போகலாம்;வருடம் போனது

3)பெண்:- நகரவாசம் வேண்டும்.
👉சொந்த வீடு, வாகனம் இருக்கிறது. ஆனால் புறநகர்ப்பகுதி.
நீ போகலாம்; வருடம் போனது

4)பெண்:- அரசாங்கத் தொழில் புரிய வேண்டும்.
👉நகரத்தில் சொந்த வீடு இருக்கிறது, வாகனம் இருக்கிறது, வியாபாரம்.
நீ போகலாம்; வருடம் போனது

4)பெண்:- அக்கா, தங்கை இருக்கக்கூடாது.
👉நகரத்தில் சொந்த வீடு இருக்கிறது, வாகனம் இருக்கிறது, அரசாங்கத் தொழில், ஒரு அக்கா, ஒரு தங்கை திருமணமாகாமல் இருக்கிறார்கள்.
நீ போகலாம்; வருடம் போனது. 

5)பெண்:- அப்பா, அம்மாவை உடன் வைத்துக் கொள்ளக்கூடாது.
👉நகரத்தில் சொந்த வீடு இருக்கிறது, வாகனம் இருக்கிறது, அரசாங்கத் தொழில், அக்கா,தங்கை  எவருமில்லை. அப்பா, அம்மா என்னுடன்தான் இருப்பார்கள்
நீ போகலாம்; வருடம் போனது

6)பெண்:- சமைக்கத் தெரிய வேண்டும்.
👉நகரத்தில் சொந்த வீடு இருக்கிறது, வாகனம் இருக்கிறது, அரசாங்கத் தொழில், அப்பா, அம்மா இல்லை, ஒரே பிள்ளை, சமைக்கத்தெரியாது
நீ போகலாம்; வருடம் போனது

7)பெண்:- குடிப்பழக்கம், சிகரெட் இருக்கக்கூடாது.
👉நகரத்தில் சொந்த வீடு இருக்கிறது, வாகனம் இருக்கிறது, அரசாங்கத் தொழில், அப்பா, அம்மா இல்லை, ஒரே பிள்ளை, நன்றாக சமைக்கத் தெரியும் நண்பர்களுடனான சந்திப்பின்போது மட்டும் பீர் குடிப்பேன்.
நீ போகலாம்; வருடம் போனது
 
8)பெண்:- வரதட்சணை கேட்கக்கூடாது
👉நகரத்தில் சொந்த வீடு இருக்கிறது, வாகனம் இருக்கிறது, அரசாங்கத் தொழில், அப்பா, அம்மா இல்லை, ஒரே பிள்ளை, நன்றாக சமைக்கத் தெரியும், குடிப்பழக்கம், சிகரெட் எதுவுமில்லை. வரதட்சணை என ஒரு ரூபாயேனும் வேண்டாம். 
சம்மதம்🙌

திருமணம்💑

மாப்பிள்ளை:- குழந்தை வேண்டும்.
👉வயதாகிவிட்டது, குழந்தை பெற தகுதி இல்லை.
நீ போகலாம்
வாழ்க்கையே போனது💔

-✍ஹட்டன் பிரவீனா.

Post a Comment

0 Comments