Subscribe Us

header ads

சுய சிந்தனை(Self Thinking)


சுய சிந்தனை(Self Thinking)



நாம் எமது சுய சிந்தனையில் ஒரு காரியத்தில் இறங்கும்போது அதனூடு வரவு வந்தாலோ, இழப்பு ஏற்பட்டாலோ அது நம்மை மட்டுமே முழுமையாய் வந்தடையும். விளைவு மகிழ்வோ, துக்கமோ அதை நம் மனம் ஏற்றுக் கொள்ளவும் செய்யும். வந்தால் மகிழ்ச்சி, இழந்தால் துக்கம்.
ஆனால்,
இன்னொருவரின் சிந்தனையில் நாம் அவரை நம்பி ஒரு காரியத்தில் இறங்கும்போது இந்த நிலை பற்றி யோசிக்க முடியாது. அது ஏற்றத்தாழ்வாகவே அமைந்துவிடும். ஒருவரின் இழப்பு மற்றவருக்கு வரவாக அமைந்துவிடும். நமது இழப்பு நாம் நம்பியவருக்கு வரவாக அமைந்துவிடின் அதனை நம் மனம் ஏற்கமறுக்கும்;  பெரும் வேதனையாகவே கொள்ளும்; ஏமாற்றத்தையே தரும்; அது வாழ்வையே புரட்டிப் போட்டு விடும்.

ஆகவே, சுய சிந்தனையில் ஈடுபடுங்கள். உங்களை மட்டுமே நீங்கள் நம்புங்கள்.  வரவோ, இழப்போ அது உங்களுக்கு சொந்தமானதாய் இருந்து வாழ்க்கையை சுமூகமாக அமைத்துக் கொடுக்கட்டும்....!

வாழ்க்கையின் ஒவ்வொரு முன்னேற்றப்படிகளிலும் இதனை மனதில் நிறுத்திக்கொண்டு பிரயோகிக்க தவறிவிடாதீர்கள்.
நன்றி.

-✍ஹட்டன் பிரவீனா.

Post a Comment

0 Comments