Subscribe Us

header ads

புறக்கணிப்பு


புறக்கணிப்பு




புறக்கணிப்புகளுக்கு பல காரணிகள் அடிப்படையாக விளங்கலாம். நான் இச்சந்தர்ப்பத்தில் அவை பற்றி கூற விழையவில்லை. புறக்கணிப்பின் வலி பற்றி ஓரிரு வரிகள்.... புறக்கணிப்பின் வலி மிக ஆழமானது; அதே சமயம் அது வலிமை கொண்டது. இந்த சமூகமும் நமக்கு வேண்டியவர்களும் தான் நம்மைப் புறக்கணிக்கிறார்களே தவிர நம் மனம் ஒருபோதும் நம்மை புறக்கணித்துக் கொள்வதில்லையே... புறக்கணிப்பின் வலி நமக்குக் கற்றுத்தரும் பாடம் சரித்திரம் படை என்பதாகும்.

ஆகவே, எவர் நம்மை புறக்கணித்தாலும் நாம் அதனை ஏற்றுக்கொள்வோம். வலியைத்தாங்கி மீண்டெழுவோம்.
எந்த சந்தர்ப்பத்திலும் நாம் மற்றொருவரை வலி தரும் வகையில் புறக்கணிக்காதிருக்கக் கற்றுக் கொள்வோம்.
யதார்த்தத்தின் பாதையில் துவண்டு விடாமல் வாழ்வை வலுபெறச் செய்வோம்.
நன்றி.

-✍ஹட்டன் பிரவீனா.

Post a Comment

0 Comments