உங்கள் பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை புறந்தள்ளிவிட்டு புறம்பேச மட்டுமே தெரிந்த சமூகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதும் ஏனோ....
இந்த சமூகத்திற்கு நீங்கள் பட்டினியில் கிடக்கையில் ஒருபிடி உணவளிக்கத் தெரியாது. நீங்கள் நோயில் வாடுகையில் பராமரிக்கத் தெரியாது. அவசரத்தில் ஒரு ரூபா தரத்தெரியாது. கீழே விழுந்தால் கைதூக்கிவிடத் தெரியாது. ஆனால், ஆயிரம் கதைகள் பேசத் தெரியும். மண்ணைவாரித் தூற்றத்தெரியும். தவறிவிழுந்தால் கைகொட்டிச் சிரிக்கத் தெரியும். உதவியென்று வருகையில் முகம் முறிக்கத் தெரியும்.
கௌரவம் என்ற பெயரில் உங்கள் விருப்பங்களைத் தொலைத்து சமூகத்திற்காக ஏன் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
உங்களிடம் மற்றவரை அவதூறு பேசுவதைப்போல் இச்சமூகம் உங்களைப் பற்றியும் அவதூறு பேசத்தவறாது என்று என்ன நிச்சயம்? இந்த வாழ்க்கையில் அவன் என்ன நினைப்பானோ, இவன் என்ன சொல்லுவானோ என ஏன் உங்கள் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எவன் என்ன நினைத்தால் என்ன, என் வாழ்க்கை, என் உரிமை என ஏன் உங்களால் வாழ்ந்துவிட முடிவதில்லை?
நிதமும் சந்தோஷத்தைத் தொலைத்து இந்த சமூகத்துக்குப் பயந்து கூனிக்குறுகி ஏன் வாழ வேண்டும். அப்படி ஒரு வாழ்க்கை அவசியமே கிடையாது. நாம் அடுத்தவருக்காக பிள்ளை பெறவில்லை, அடுத்தவருக்காக அதனை வளர்த்து ஆளாக்கவில்லை எனும் போது அதன் உணர்வுகளைக் கொன்றுவிட்டு இன்று அதன் வாழ்க்கையில் ஏன் அடுத்தவருக்காக சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
நல்வழிகாட்டும் பெயரில் சமூகம்தான் நாடகமாடிக் கொண்டிருக்கிறதென்றால் நாமும் ஏன் அதற்கு இணங்கிக் கொண்டிருக்கிறோம். பெரும்பான்மையினர் செல்லும் வழியில் செல்ல எண்ணாதீர்கள். உங்கள் மகிழ்ச்சிக்கு ஏதுவான சரியான வழியில் பயணிக்க எண்ணுங்கள். உங்கள் உழைப்பு உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் தானே அல்லாமல் இச்சமூகத்திற்கு அல்லவே! ஆக, வாழ்வின் சந்தோஷத்தை மட்டும் ஏன் தொலைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இன்றைய காலகட்டங்களில் எவ்வளவோ மாறிவிட்ட நிலையில்
மாமிசம் உண்பதற்கு செவ்வாய், வெள்ளி நமக்குப் பிரச்சினையாக இல்லை, மாறாக சமூகத்தின் கண்ணோட்டம் தான் பிரச்சினையாகத் தெரிகிறது. ஆடு தின்பவனுக்கு மாடு தின்பதில் பிரச்சினையில்லை, சமூகப்பாகுபாடுதான் பிரச்சினையாக இருக்கிறது. இன்று பக்கத்துவீட்டுக்காரன் கோவிலுக்கு செல்கிறான் என்று கோவில் செல்பவர்கள் எத்தனை பேர்? அவனது மகன் வைத்தியருக்கு படிக்கிறான் என்று தம் பிள்ளையையும் உயிரியல் கற்க வைப்பது எத்தனை பேர்? பெற்றோர்கள் இன்னும் ஏன் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்?
இது ஒரு பரந்துபட்ட உலகம். அடுத்தவனின் சுதந்திரத்திற்கும் உரிமைக்கும் கேடு விளைவிக்காத வகையில் நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ்வதில் கருத்து சொல்லவோ, பிழை சொல்லவோ எவனுக்கும் உரிமை கிடையாது. உங்களதும் பிள்ளைகளினதும் மகிழ்ச்சியை யாருக்காகவோ பூச்சியமாக்கி விடாதீர்கள். பிள்ளைகள் விரும்புபவற்றை செய்யவிடுங்கள். உங்களுக்கு பாகற்காய் பிடிக்குமென்று பிள்ளை வாயில் அதை திணிக்காதீர்கள். எதிர்வீட்டுக்காரன் கூறினான் என்று உங்கள் பிள்ளைக்கு பிடிக்காத துறையில் இணைத்துவிடாதீர்கள்.
நீங்கள் வாழ்க்கையில் வாழ்ந்து களித்தீர்களோ இல்லையோ வாழ்ந்து கழித்தவர்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் அப்படியல்ல, அது நீளமானது, அவர்கள் இன்னும் நெடுதூரம் பயணிக்க வேண்டும். வெறுமனே சுயநலம் மிகு சமூகப்போர்வையின் முட்டாள்தனத்தில் அப்பாதையை நீங்களே குறுக்கிவிடாதீர்கள். பிள்ளைக்கு நல்லது புகட்டுங்கள் ஆனால் பிள்ளையின் விருப்பறிந்து செயற்படுங்கள். அதற்கென ஆயிரம் கனவுகள் இருக்கும். அதற்கான முயற்சிகளை அது செய்துகொண்டுதான் இருக்கும். அதற்கு நீங்களும் ஊக்கமளியுங்கள். தோல்வியடைந்தால் கைதூக்கிவிடுங்கள். உங்கள் கைகளைப் பற்றிக்கொண்டு உயராத பிள்ளையை சமூகம் ஒன்றும் தன் தோளில் சுமந்துவிடப் போவதில்லை. பிள்ளைகளின் வாழ்க்கையில் உங்கள் விருப்பு, வெறுப்புகளைத் திணிக்காது அவர்களை அவர்களாக வாழ விடுங்கள்.
உங்கள் பிள்ளையை நீங்களே புரிந்து கொள்ளவில்லை என்றால் சமூகம் தலையில் வைத்து கொண்டாடியும் என்ன பயன் இருந்துவிடப் போகிறது! பிள்ளைகளிடம் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் ஆவேசத்திற்கு வளர்ந்து விட அவர்கள் ஒன்றும் பிராய்லர் கோழிகளல்ல. ஒரு விதை மரமாக எப்படி காலம் கொடுத்து காத்திருக்கிறோமோ அதை ஏன் நம் பிள்ளைகளுக்குத்தர மறுக்கிறோம் . பொறுத்திருத்திருங்கள். பேசிப் பேசி களைப்பில் ஓய்ந்துவிடப் போகும் ஒன்றுமற்ற சமூகத்திற்காக புன்னகைக்கும் மலர்மொட்டுக்களை இருட்டறையில் சிறைவைத்து விடாதீர்கள்!
-✍ஹட்டன் பிரவீனா.

0 Comments