☆விதவை நான்!
வானதூதுவர் மத்தியிலே விரலிட்ட
மோதிரமோ ஒளிமங்கிக்கிடக்க
கர்த்தரை நோக்கி அழைத்தேனே
இனியொரு வாழ்வு வேண்டாமய்யா!
மோதிரமோ ஒளிமங்கிக்கிடக்க
கர்த்தரை நோக்கி அழைத்தேனே
இனியொரு வாழ்வு வேண்டாமய்யா!
ஆசைப்பட்ட அக்னிகுண்டம் வெந்து
காமப்பட்ட என்னுடலோ வலம் வந்து
கழுத்தில் ஏறிய தாலிக்கயிறு
சரிந்து சாம்பலாகிப் போனதுவே!
காமப்பட்ட என்னுடலோ வலம் வந்து
கழுத்தில் ஏறிய தாலிக்கயிறு
சரிந்து சாம்பலாகிப் போனதுவே!
முக்காடிட்ட முகப் புன்னகையோ
நிக்காஹ் செய்ய மனமுவந்துதான்
துஆ செய்து மனங்கலங்கியது
அல்லாஹ்வே எனைக் காத்தருளும்!
நிக்காஹ் செய்ய மனமுவந்துதான்
துஆ செய்து மனங்கலங்கியது
அல்லாஹ்வே எனைக் காத்தருளும்!
மணி ஒலிக்கையிலே ஆராதனை
நிதமும் வாட்டிடுமே என் வேதனை
ஏரோதிடம் தப்பிய குமாரனே எனை
கொஞ்சம் ஏரெடுத்துப் பாருமைய்யா!
நிதமும் வாட்டிடுமே என் வேதனை
ஏரோதிடம் தப்பிய குமாரனே எனை
கொஞ்சம் ஏரெடுத்துப் பாருமைய்யா!
இன்று வரை வைக்கவில்லை பொட்டு
நான் உனை இழந்த நாள் தொட்டு
இனியும் வரவேண்டாம் அபலைக்கு
பொட்டிட்டு பூவும் சூடி அலங்கரிக்க!
நான் உனை இழந்த நாள் தொட்டு
இனியும் வரவேண்டாம் அபலைக்கு
பொட்டிட்டு பூவும் சூடி அலங்கரிக்க!
காதல் ஹராம் என்று நன்கறிவேன்
ஆகவே காத்திருந்தேன் நிக்காஹ் செய்ய
அதன்பின்னே உடனிணைய ஆசைதான்
இனி வேண்டாம் எனக்கு எதுவுமே!
ஆகவே காத்திருந்தேன் நிக்காஹ் செய்ய
அதன்பின்னே உடனிணைய ஆசைதான்
இனி வேண்டாம் எனக்கு எதுவுமே!
இப்படியெல்லாம் கண்ட கனவு
நொந்து நொந்து தணிகிறதே!
இனியொரு சுகம் வேண்டுமா
உனையிழந்த இந்த பாவிக்குமே!
நொந்து நொந்து தணிகிறதே!
இனியொரு சுகம் வேண்டுமா
உனையிழந்த இந்த பாவிக்குமே!
மரணித்தால் தான் மரணமா இல்லையடா!
பிரிந்து சென்றதால் மரணித்தாய் நீயடா!
மனம் தொட்டு மானம் விட்டு சொல்லடா!
நீயின்றி நானென்றும் விதவை தானடா!
பிரிந்து சென்றதால் மரணித்தாய் நீயடா!
மனம் தொட்டு மானம் விட்டு சொல்லடா!
நீயின்றி நானென்றும் விதவை தானடா!
நீங்கிச் சென்ற நீ என் மனதில் மரணித்து விட்டாய், தாங்கி நின்ற நான் இவ்வுலகில் விதவையாகிப் போனேன்,
திருமணம் என்ற ஒன்று நிகழாத போதிலும்....
திருமணம் என்ற ஒன்று நிகழாத போதிலும்....
✝ॐ☪
பிரவீனா-ஹட்டன்
0 Comments