Subscribe Us

header ads

அரசின் பிரதான மூலக்கூறுகள் எவை?




அரசின் பிரதான மூலக்கூறுகள்

அரசின் பிரதான மூலக்கூறுகளாக

  • குறித்த நிலப்பரப்பு
  • நிச்சயிக்கப்பட்ட மக்கட்தொகை
  • அரசாங்கம்
  • இறைமை
ஆகியவற்றை இனங்காணலாம்.

இவற்றுள் குறித்த நிலப்பரப்பு,
நிச்சயிக்கப்பட்ட மக்கட்தொகை என்பவற்றை பௌதிகக் கூறுகளாகவும் அரசாங்கம், இறைமை என்பவற்றை அகக்கூறுகளாகவும் காணலாம். இவற்றோடு அரசின் ஏனைய பண்புகளாக

  • தேசிய அடிப்படை
  • சர்வதேச அங்கீகாரம்
  • அரசியல் யாப்பு
  • பண அலகு
என்பனவற்றையும் குறிப்பிட இயலும்.

  • குறித்த நிலப்பரப்பு

குறித்த நிலப்பரப்பை ஆட்புலம் என்றும் வரையறுக்கலாம். அதாவது, அரசு ஒன்று உருவாவதற்கு வான். கடல், தரை ஆகிய பௌதிக ஆட்புல வரையறைக்கு உட்பட்டிருத்தல் வேண்டும். இப்பண்பானது அரசிற்கான அடையாளமாகக் கருதப்படும். இவற்றுக்கிடையே வரையறை சிக்கல்கள் ஏற்படுமாயின் அரசுகளுக்கிடையில் முரண்பாடுகளும் குழப்பநிலையும் உருவாகும்.
உ+ம்:
இஸ்ரேல்-பாலஸ்தீனம்
இந்தியா-பாகிஸ்தான்

  • நிச்சயிக்கப்பட்ட மக்கட்தொகை

குறித்த நிலப்பரப்பில் ஒன்றுகூடுகின்ற மக்கட்தொகையினர் அரசு உருவாவதில் முக்கிய பங்கு செலுத்துகின்றனர். முழுமையான ஒன்றாகக் கருதப்படும் அரசு, பொதுநலன்களுக்காக செயல்படுதல் என்ற நாமத்துடனேயே இயங்குகிறது. அதுமட்டுமன்றி அரசியல் ரீதியாக ஒழுங்கமைந்த மக்கட்சமூகமே அரசாகும். ஆகவே நிச்சயிக்கப்பட்ட மக்கட்தொகையும் அரசின் பிரதான மூலக்கூறாக விளங்குகிறது.

  • அரசாங்கம்

அரசு என்பது கட்புலனாகாததும் ஸ்பரிசிக்க முடியாததாகும். ஆகவே அரசின் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் மரபுரிமையாளராக அரசாங்கம் விளங்குகிறது. இவ் அரசாங்கம் சட்டத்துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை ஆகிய முத்துறைகளினூடு அரசின் கடமைகளை நிறைவேற்றுகிறது. இது மனித சமூகத்தை கட்டுப்படுத்தி நிர்வகிக்கும் அரசனின் முகவராக காணப்படுவதோடு மட்டுமல்லாது நிரந்தரமற்றதும், காலரீதியான மாற்றத்திற்கு உள்ளாகக்கூடியதுமாகும்.

  • இறைமை

இறைமை என்பது அரசின் மீயுயர் அதிகாரமாகும். அரசின் முதன்மையானதும், தனித்துவமானதுமான பண்பாகும். இது அரசை ஏனைய சகல அரசியல் மற்றும் சமூகத்தாபனங்களிவனலிருந்து உயர் நிலையில் வைத்துக்காக்கிறது. அரசின் ஆன்மாவாக இருப்பதோடு அரசினால் பலவந்தமான அதிகாரத்தை பயன்படுத்துவதற்கான சட்டரீதியான தன்மையையும் வழங்குகிறது. இறைமையானது உள்வாரியானதும், வெளிவாரியானதுமென இரு பகுதிகளை உடையதாகும்.



-✍ஹட்டன் பிரவீனா


Post a Comment

0 Comments