அன்பு ஒன்றுதான் மானங்கெட்டது!
"அன்பு ஒன்றுதான் மானங்கெட்டது" என்ற ஒற்றை வரியே போதும், விளக்கமேதும் தேவையில்லை. பார்த்தவுடன் மனதிற்குப் பிடித்துப்போன வரி இது. காரணம் - மானங்கெட்டும் அன்பு செலுத்துபவராக வாழும் பிறவி இம்மனிதப்பிறவி!
அன்பின்றி இந்த உலகம் அசையாது எனினும் நம்மைப் புறக்கணித்து செல்வோர் மேல் கூட நாம் ஏன் அன்பு செலுத்திக் கொண்டிருக்கிறோம்... எதற்காகவோ அவர்பின் அலைந்து கொண்டிருக்கிறோம்... எல்லாம் அன்பெனும் மாயை.
அன்பு என்பது ஒரு கயிறு.
குடும்ப உறவு, நட்பு, காதல் மட்டுமல்ல வேறு எந்த உறவாக இருப்பினும் இருவர் இழுக்கும் அந்த கயிறை ஒருவர் விட்டால் இறுக்கமாய் பற்றியிருப்பவர் கீழே விழுவார். கயிறை விட்டவர்க்கு எந்த வலியும் இருக்கப் போவதில்லை, இறுக்கமாய்ப் பற்றியவருக்கு பலத்த அடியுடன் வலிக்கும். இதுதான் நியதி.
பிள்ளை தன்னை விட்டுச் சென்றாலும் தாய் கொண்ட அன்பு மாறப்போவதில்லை. ஒரு தாய் தன் பிள்ளையை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை. நாமும் தாய்க்கு நிகராக வாழ்ந்துவிடுவோம். நாம் கொடுப்பது நிச்சயம் ஒருநாள் நம்மை வந்தடையும் என்ற நம்பிக்கைப் பெருமூச்சுடன்...
ஆகவே அன்பு செலுத்துங்கள்.
யாரையும் ஏமாற்றாமல் அன்பு செலுத்துங்கள். எதிர்ப்பார்ப்பு எதுவுமின்றி அன்பு செலுத்துங்கள்
உங்களை நேசிப்போர் மீது அன்பு செலுத்துங்கள்.
அன்பை மிஞ்சிய சக்தி இல்லை. அன்பே எல்லாம்!
-✍ஹட்டன் பிரவீனா.
0 Comments