☆தக்காளி!
அத்தான்! என்றேன் அசரவில்லை!
மச்சான்! என்றேன் மசியவில்லை!
மாமா! என்றேன்,வேண்டாம் என்றாய்...
கள்வா! என்றேன் கண்ணிமைத்தாய்,
கறுப்பா! என்றேன் கைபிடித்தாய்!!!
என் காதுக்கினிதாய்-நீ
கானம் பாட,
உன் மனதிற்கினிதாய்-நான்
தோளில் சாய,
என் எண்ணமெல்லாம்-உன்
ஆசை தோய,
கனவுகள் மட்டும்-என்
கண்களில் சிக்கிக் கொள்ள...
பொய்யாகியும் போனதோ
நம் ஆசை வாழ்க்கை!!!
மெய்யாக்கியும் விடுமா
இனி வரும் வாழ்க்கை?
என்றும் நீயே வேண்டும்,
உன் தோளில் சாய்ந்து,
உன் மார்பில் மிதந்து,
உன் மடியில் தவழ்ந்து,
உன் கருவை சுமந்து,
உன் காலடியில் கிடக்க...
கறுப்பா!!!
வரம் கொடு
உன் ஆசை தக்காளி
உயிர் விடும் பொழுதிலாவது
உன் மடியில் தவழ ...
https://youtu.be/rw8A95TISzM
Like,Share,Comment & Subscribe
பிரவீனா-ஹட்டன்
0 Comments