Subscribe Us

header ads

புதிதாய்ப் பிறந்த உன் கோபம்- கவிதை


                         ☆உன் கோபம்



அன்று நீ விரும்பினாய்
நானும் விரும்பினேன்,
இன்று நான் விரும்புகிறேன்
நீ விரும்பவில்லை.
அன்று நீ கேட்டாய்
நானும் தந்தேன்,
இன்று நான் கேட்கிறேன்
நீ தரவில்லை.
அன்று நீ அழைத்தாய்
நானும் வந்தேன்,
இன்று நான் அழைக்கிறேன்,
நீ வரவில்லை.
அன்று நீ பேசினாய்
நானும் கேட்டேன்,
இன்று நான் பேசுகிறேன்,
நீ கேட்கவில்லை.
அன்று நீ பார்த்தாய்
நானும் பார்த்தேன்,
இன்று நான் பார்க்கிறேன்
நீ பார்க்கவில்லை.
அன்று நீ தந்தாய்
நானும் வாங்கினேன்,
இன்று நான் தருகிறேன்
நீ வாங்கவில்லை.
மொத்தத்தில்
அன்று இருந்தது,
இன்று இல்லை.

புதிதாய்ப் பிறந்த
உன் கோபத்தைத்
தவிர!


பிரவீனா-ஹட்டன்

Post a Comment

0 Comments