Subscribe Us

header ads

சுயமரியாதை(Self Respect) Vs அன்பு (Love)


சுயமரியாதை(Self Respect) Vs அன்பு (Love)


சுயமரியாதை என்பது ஒவ்வொருவரும் சமூகத்தில் எதிர்ப்பார்க்கும் விடயமாகும். அதற்கு இழுக்கு ஏற்படுவதை எவர் மனமும்  ஏற்றுக்கொள்ளாது. இவ்வுலகிலே யாரும் யாரிடமும் தாழ்ந்து போக விரும்புவதில்லை. அவரவர்க்கு அவரவர்தான்  உயர்வு. இதில் உணர வேண்டிய விடயம் என்னவென்றால்  இந்த சுயமரியாதை  நாம் சமுதாயத்தில் எவ்வாறு நடந்து கொள்கின்றோமோ அதற்கேற்பதான் எமக்குக் கிடைக்கும்.

இது நாம் சுயநலப்பாங்கோடு மேலோட்டமாக பழகும் சமூகத்தில் பொருத்தமானதே தவிர இதனைக்கடந்து அன்பு  என்றவொன்று நம்மைக் கட்டியாளுகிறது. அன்பா, சுயமரியாதையா என்றால் தூய்மையான நேசம் அன்பைத் தேர்ந்தெடுக்கும்; சுயநல நேசம் சுயமரியாதையைத் தேர்ந்தெடுக்கும். உண்மையான அன்பிற்கு சுய மரியாதை அவசியப்படுவதில்லை. நாம் நேசிக்கும் ஒருவரிடம் சுயமரியாதையை எதிர்ப்பார்ப்பது இல்லை.

சுயமரியாதையும் அன்பும் தராசுக்கோலின் இரு தட்டுக்கள். ஒன்று ஏறினால் ஒன்று இறங்கிடும். இறங்கியது ஏறினால் ஏறியது இறங்கிடும். இதனை சரிசமனாய் பேணத்தெரிந்தவர்கள் வாழ்க்கையில் ஜெயித்து விடுகிறார்கள்... மற்றவர்கள்  ஏதோ ஒன்றைப் பிடித்துக் கொண்டு வாழ்க்கையில் தோற்றுப்போகிறார்கள்.

ஆக, சுயமரியாதையை உயர்த்திப்பிடித்து அன்பைத்தாழ்த்தி விடாதீர்கள், அதேபோல  அன்பை உயர்த்திப்பிடித்து சுயமரியாதையையும் தாழ்த்திவிடாதீர்கள்.
நன்றி.

-✍ஹட்டன் பிரவீனா

Post a Comment

0 Comments