☆நவம்பரும் கடந்து போகும்!
எதையும் எதிர்பாராதே என
சொல்லி சொல்லி கண்டிக்கிறேனே,
மீறியும் செய்வேன் என்றால்
என்ன செய்ய இந்த இதயத்தை!
அரிவாள் கொண்டு அறுத்திடவா...
உளி கொண்டு செதுக்கிடவா...
ஆணி வைத்துதான் அடித்திடவா...
வேரோடு பிடுங்கி எறிந்திடவா?
இதயமே! ஏமாறப்போகிறாய்
உனக்கு எங்ஙனம் விளக்குவேன்,
நம்பி நம்பி நாசமாய்ப் போன
கதையெல்லாம் மறந்து போனாயோ!
மீண்டும் மீண்டும் போகாதே
கேட்பது கிடைக்காதென தெரியும்
எதிர்ப்பார்க்கும் நாள் வரும் ஆனால்
எதிர்ப்பார்த்தபடி அமைந்தும்விடுமா?
வேண்டாம், ஆசைகளைத் துடைத்தெறி
முன்னிற்கும் கனவுகளை பூட்டி வை
நவம்பர் மாத மழை நின்றாலும்
உன் கண்ணீர்ச்சாரல் நின்றுவிடாது!
நீயதில் குளிக்க நினைத்தாயோ
பரிதாபம், தீயாய் எரிக்கின்றதே!
நவம்பரும் கடந்து போகும் அடுத்தே
டிசம்பரும் கடந்தே போகுமே...!
எல்லாம் மறந்துவிடு, மறைத்தும் விடு
பதினைந்தில் வண்ணம் பூசி
ஆறில் ஆழம் புகுந்த காலமெல்லாம்
இருவருடம் முன்பே கலைந்து போனதே!
உன் கண்களுக்கு நினைவில்லையா
இல்லை நினைக்க மறுக்கின்றாயா
மீண்டும் ஒரு முறை ஆசை கொண்டால்
உனையேதும் செய்திலேன், மாய்வேன்!
-✍ஹட்டன் பிரவீீீனா.
0 Comments