☆மழைக்கனவு
மேகம் கண்ணீர் சிந்த
காளான் குடை விரிக்க
நத்தை நகர்ந்து வர
எத்தனையோ ஆசைகள்
ஒரு குடை இணைந்து
கைகோர்த்து கால் நடந்து
தோள்சாய்ந்து கரைகடந்து
நான் விழ நீ தாங்க
மார்போடு மார்பாக
நீ சாய்க்க நான் தூங்க
குடை பறக்க உடை நனைய
கைகள் என்னை மறைக்க
கண் மட்டும் கண் நோக்க
நெற்றியில் வழியும் நீர்
மார்பில் புகுந்து கொள்ள
எட்டிப்பார்க்க விட்டுத்துடிக்க
இதயம் படபட காலோ கடகட
அருகில் வரவர அள்ளித் தரதர
ஐயோ எல்லாம் கனவா....
இவையெல்லாம் மாயமா
இல்லை காதலின் சாயமா
காளான் குடை மடக்க
நத்தை கூடு திரும்ப
அத்தனை ஆசையும் பொய்யா
குடையும் கட்டற
கை ஏங்க கால் நகர
தோள் விட்டு குழி விழ
நான் கிடக்க நீ மறைய
நெஞ்சோடு நெஞ்சாக
தீ வைக்க நான் தாங்க
குடை எரிந்து உடை எரிய
மறைத்த கையும் வெந்து நோக
மனம் மட்டும் மானம் கேட்க
நெஞ்சில் வழியும் குழம்பு
தண்ணீர் கேட்டு அழுதிட
இதயம் சுடசுட மனசு தடதட
ஐயோ இதுதான் நனவா....
பிரவீனா-ஹட்டன்
0 Comments