Subscribe Us

header ads

பிரித்தானியரால் இலங்கை அழைத்து வரப்பட்ட இந்திய தமிழர்களின் சொல்லொணாத் துயரம்



☆தென்னிந்தியா தள்ள இலங்கை இழுத்தது!

தமிழ்நாட்டுப் பண்ணையடிமை முறை,
பொருளாதார நெருக்குவாரங்கள்,
சாதிய ஒடுக்குமுறைகள்
தள்ளின ஒரு கூட்டத்து மக்களை!

பொருளாதார விடுதலை வேண்டும்
சாதித்துவ விடுதலை வேண்டும்
சாப்பாட்டுக்கு வழி வேண்டும்
மொத்தத்தில் நிம்மதி வேண்டும்...

இலங்கையில் சுதந்திர வேலை,
அதனோடு சுயகௌரவ வாழ்க்கை,
பிரித்தானியனின் பசப்பு வார்த்தை
இழுத்தன அக்கூட்டத்து மக்களை!

துரையினது தோட்டமாம்!
கொழுந்தெடுப்பது சுதந்திரமாம்!
தேயிலைக்கடியில் தேங்காயாம்!
கூடவே மாசியுமாம்! ஹா!

கேளிக்கை வார்த்தைகள்
வேதமும் ஆனதே!
இடம்பெயர்வு எங்களின்
கூத்தும் ஆனதே!

இடம்பெயர்வல்ல,
இது புலம்பெயர்வு!
புலம்பெயர்வுத்
தமிழிலக்கிய வரலாறு!

அதன் ஆரம்பமும் எதுவோ?
"மலையக நாட்டார் பாடல்கள்"
இன்று தனிப்பாதை வகுத்ததுவோ,
"மலையகத் தமிழிலக்கியம்" என்று!

முழு அங்கீகாரம் தந்தது
சர்வசன வாக்குரிமை!
வித்தியாசம் வந்தது
சனத்தொகைப் பரம்பலிலே!

தாயகம் திரும்புவதா?
வன்னியில் குடிபுகுவதா?
வெளிநாடு செல்வதா?
குழப்பம் குழப்பம் குழப்பம்!!!

இதற்கிடையில் கொடுமை!
சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம்!
வெளியேறிச் செல்ல நிர்ப்பந்தம்!
மறுப்பின் நாடுகடத்தல்!

ஐந்து லட்சம் பேர் வெளியேறினரே!
இன்று இருந்திருந்தால் 
இரண்டாம் சனத்தொகை
மலையகத் தமிழர்கள்!

தெற்கில் வன்செயல்,
வன்னியில் பாதுகாப்பு!
தஞ்சம் புகுந்தனர்,
மிகுதி அடிமைகள்!

ஓரிரண்டு வெளிநாடோட
மிச்சமெல்லாம் நொந்து
நொந்து நூலாய்ப் போன
வரலாற்றை எங்ஙனம் சொல்ல...

தாயகமோ இந்தியா
வாழ்வதோ இலங்கை
பெயரோ இந்தியத்தமிழர்
சொந்தமும் எதுவோ???

இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களுக்கு அவர்களின் ஓரங்கமாய் என் வார்த்தைகள் சமர்ப்பணம்!!!

            https://youtu.be/XGOB2K35d2g
           Like,Share,Comment & Subscribe 


☆பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்ய:



பிரவீனா-ஹட்டன்



Post a Comment

0 Comments