☆கறை படிந்த புத்தகம்
"நான் உன்னை இழந்து விட்டேனா?
உன் காதலை இழந்து விட்டேனா?"
அவனது கண்கள் கலங்கிய குளமாய் சுவரில் வடக்கு நோக்கி மாட்டப்பட்டிருந்த அழகிய தேவதையின் முகத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததோடு, அவனது விரல்கள் புகைப்படக் கூந்தலை வருடிக்கொண்டிருந்தன.
ஆம்,அவள் தேவதையின் சாயல் தான்.
ஆம்,அவள் தேவதையின் சாயல் தான்.
அந்த கண்களில் நியூட்டனைத் தோற்கடிக்கும் ஈர்ப்பு விதி;நாள் பூராவும் அவன் மீது ஒளி வீசும் அவளது பார்வை;
மூக்கின் வலப்பக்கத்தில் அளந்து குத்திய மூக்குத்தி போல் அழகிய மச்சம்; இதழோரங்களில் தென்றல் போல் மெல்லிய நகை;பொன்மஞ்சள் முகம்; மொத்தத்தில் அவள் ஒரு "தேவதை"
மூக்கின் வலப்பக்கத்தில் அளந்து குத்திய மூக்குத்தி போல் அழகிய மச்சம்; இதழோரங்களில் தென்றல் போல் மெல்லிய நகை;பொன்மஞ்சள் முகம்; மொத்தத்தில் அவள் ஒரு "தேவதை"
தேங்கி நின்ற கண்ணீர் கீழே சொட்டச்சொட்ட அவனது மனம் பின்னோக்கிச் சென்று காதலில் திளைத்திருந்தது.
மணி அடித்தது. தமிழ் பாடமாச்சே! ஆரவாரமாய்க் கிடந்த பதினோராம் வகுப்பு நொடிப்பொழுதில் அமைதியானது. தமிழ் ஆசிரியர் வகுப்புக்குள் நுழைந்தார். பாடமும் ஆரம்பமாக அவனது கண்கள் அவளையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன. வெறித்தனமாய்!
" கார்த்திக் நீ சொல்லு..."
அவன் காதில் விழவில்லை..... பார்வை அலை சிறிதும் பாதை மாறாமல் ஓடிக்கொண்டிருந்தது.
"கார்த்திக்க்க்...."
அவன் காதில் விழவில்லை..... பார்வை அலை சிறிதும் பாதை மாறாமல் ஓடிக்கொண்டிருந்தது.
"கார்த்திக்க்க்...."
அருகில் அமர்ந்திருந்த நண்பன் கரண் தனது முழங்கையை அவன்மீது உந்தி,
"டேய் கார்த்திக் டீச்சர் கூப்புட்றாங்க டா" என்றான் காதோரமாய்.
"டேய் கார்த்திக் டீச்சர் கூப்புட்றாங்க டா" என்றான் காதோரமாய்.
திடுக்கிட்டு சுயநினைவுக்கு திரும்பிய அவனுக்கு எல்லாம் வெற்றிடமாய்த் தெரிந்தது. திரு திருவென முழித்தான். இதற்கிடையில் மீண்டும் மணி அடித்தது.
அவன் காதல் அவளுக்கு புரிந்ததோ என்னவோ வகுப்பறை சுவரிலிருந்த கடிகாரத்திற்கு நன்றாகவே புரிந்திருந்தது.
"நேரமாகிவிட்டது; நாளை பார்க்கலாம்"
தமிழ் ஆசிரியர் தனது கனத்த பையை தோளில் மாட்டியவாறு வெளியேறினார்.
"ஹூம்" அவன் மறுபடியும் சொர்க்க லோகத்திற்கு சென்றுவிட்டான். அந்த தேவதை அந்த மன்மதனின் பார்வையில் சிக்கிச் சின்னாபின்னமானாள். அவளுக்கும் அவன்மீது அளவுகடந்த ஆசை.
பார்வையில் மட்டுமே காதல் அரங்கேறியது... மின்னல் போல நாட்கள் ஓடிவிட்டன.

ஒருநாள் சாயங்காலம் ஆறு மணி பிந்திவிட்டது...வீட்டுக்கு வேக வேகமாய் நடையும் ஓட்டமுமாக சென்றுக் கொண்டிருந்தாள்.... வெகுதூரமாய் தன்னை யாரோ பின்தொடர்வது போன்ற உணர்வு.
"பிரணீ...."
பிரம்மை என்று நினைத்தாள்.
"பிரணீதா"
பிரம்மை இல்லை..... அவளது வேகம் நத்தையிடம் தோற்றுப் போனது. மெதுவாக கழுத்தைத் திருப்பினாள். அவளின் ஆசை முகம் சாயங்கால இருட்டில் மங்கிக்கிடந்தது..
"பிரணீ...."
பிரம்மை என்று நினைத்தாள்.
"பிரணீதா"
பிரம்மை இல்லை..... அவளது வேகம் நத்தையிடம் தோற்றுப் போனது. மெதுவாக கழுத்தைத் திருப்பினாள். அவளின் ஆசை முகம் சாயங்கால இருட்டில் மங்கிக்கிடந்தது..
"க்க்கா....ர்த்தி(க்)" குரல் நடுநடுங்கியது.
அவன் தைரியமாகத்தான் இருந்தான், ஆனால் அவனது கால்கள் தரையில் படவில்லை. இரண்டு நொடி தடுமாறிய பின்,
"பிரணீ...ஐ லவ் யூ. எனக்கு உன்ன பிடிச்சிருக்கு. உனக்கு என்ன பிடிச்சிருக்கா?"
மார்கழிக் குளிரில் கூட நடுங்காத அவளது உடம்பு கடகடத்துப் போனது. அவளது கைகள் வெடவெடத்துப் போயின. கண்கள் இருள ஆரம்பித்தன.
"இல்ல கார்த்திக் என் குடும்பத்துக்கு இதெல்லாம் சரிவராது..."
"நா உன் குடும்பத்த லவ் பண்ணல உன்னத்தான் லவ் பண்றேன்... நல்லா யோசிச்சு சொல்லு, டைம் எடுத்துக்கோ... ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன்.. நீ இல்லன்னா செத்துருவேன்."
கலங்கி நின்ற கண்களோடு மெது மெதுவாக நகர ஆரம்பித்த அவள் பாதையறியாது இலக்ட்ரிக் ரயில் போல ஓடி மறைந்துவிட்டாள். ஆனால் அவள் மனதில் அளவில்லா பூரிப்பு.
அவன் ஒப்புவித்த காதலுக்கு பதிலுக்காய்க் காத்திருந்தான். அவளும் அவனைக் காண்பதற்காய் காத்துக்கிடந்தாள்.
பாடசாலை வாழ்க்கையும் முடிவுக்கு வந்ததால் அவர்களால் முன்பு போல சந்தித்துக்கொள்ள முடியவில்லை.
வருடம் கழித்து, பிரபஞ்சம் இருவரையும் சந்திக்க வைத்தது.
" கார்த்திக் என்ன மறந்துடலயே..."
அவன் மழலை மாறா முகத்தில் ஒரு புன்னகை.
" அப்படி மறப்பேனா?"
வருடம் கழித்து, பிரபஞ்சம் இருவரையும் சந்திக்க வைத்தது.
" கார்த்திக் என்ன மறந்துடலயே..."
அவன் மழலை மாறா முகத்தில் ஒரு புன்னகை.
" அப்படி மறப்பேனா?"
வெகுநாள் ஆசையை ஒப்புக்கொள்ள முன்னால் அடியெடுத்து வைத்தாள். அவன் பின் சென்றான். இவள் மறுபடி முன் செல்ல அவன் பின் சென்றான்.
அவனது வலக்கையை தன் இரு கைகளால் இழுத்துப் பற்றிக்கொண்டாள்.
அவனது வலக்கையை தன் இரு கைகளால் இழுத்துப் பற்றிக்கொண்டாள்.
"ஐ லவ் யூ"
கனவு போல் இருந்தது அவனுக்கு.
கனவு போல் இருந்தது அவனுக்கு.
"என்ன ஏத்துக்குவியா???"
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று அவனது மனசாட்சி அவனை பார்த்து புன்னகைத்தது.
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று அவனது மனசாட்சி அவனை பார்த்து புன்னகைத்தது.
அன்று முதல் இருவரும் மனதளவில் அன்யோன்யமானார்கள். காதல் நாடகம் நடத்திய பல பேருக்கு கத்தி வீசிய அவள் அவனுக்கு மட்டும் கதிர் வீசினாள். காரணம் அவனது காதல் உண்மையானது...
காலங்கள் ஓட ஓட உடலும் உடலும் இணைய ஆரம்பித்தது. காதலுக்குள் காமம் ஊடுருவியது.
"உன் மனைவி எனும் அந்தஸ்துடன் ஒரே ஒரு நாள் உன்னுடன் வாழ்ந்தால் போதும்டா..!"
என்பதே அவள் வாயில் எப்போதும் தொனிக்கும் மந்திரம்.
என்பதே அவள் வாயில் எப்போதும் தொனிக்கும் மந்திரம்.
அவளது ஆத்மார்த்தமான அன்பு அவனது சுதந்திரத்தை சிறை செய்ய ஆரம்பித்தது.
அவளது ஆசையில் கூண்டுக்கிளியாய் அடைபட்ட அவன் அவளை வெறுக்க ஆரம்பித்தான்.
"என்னவனின் மூச்சுக்காற்றை மட்டுமே சுவாசித்து உயிர் வாழ எண்ணுகிறேன்" என்று பகிரங்கமாய்க் கூறித் திரிந்தவளின் கண்களுக்கு எட்டாமலேயே எங்கோ சென்றுவிட்டான்.

தேடினாள்; ஓடினாள். கைக்குட்டையாய் நழுவிவிட்டான். காதலும் காமமும் அவளைப் படுக்கையில் போட்டன. வேரில்லா மரமானாள்.
"கார்த்திக்... கார்த்திக்...."
நாளுக்கு நூறு தரம் அவளது வாய் இதைத்தான் உச்சரித்துக் கொண்டிருந்தது.
நாளுக்கு நூறு தரம் அவளது வாய் இதைத்தான் உச்சரித்துக் கொண்டிருந்தது.
நாட்கள் ஓடின. பிரபஞ்சம் அவளை அவ்வாறே விட்டுவிடவில்லை. அவளுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் அளித்து பிணமாய்க் கிடந்த அவளை உயிர்ப்பித்தது.
முன்பை விட தைரியம் அதிகரித்தது... சாதிக்கும் வெறி அவளை சாதிக்க வைத்தது. பிரபஞ்சப் பேராற்றலை உணர ஆரம்பித்தாள். தன் எண்ணம் போல் வாழ ஆரம்பித்தாள். நாளுக்கு நாள் தன் திறமைகளை வளர்த்துக் கொண்டாள்.
திருமண வயதும் தாண்டிச்சென்றது.
இப்போது அவளுக்கு இருக்கும் ஒரே ஒரு ஆசை, அவளது உயிர் பிரிய அவனது மடி வேண்டும் என்பது மட்டும் தான்.
திருமண வயதும் தாண்டிச்சென்றது.
இப்போது அவளுக்கு இருக்கும் ஒரே ஒரு ஆசை, அவளது உயிர் பிரிய அவனது மடி வேண்டும் என்பது மட்டும் தான்.
மத்தியானம் தாண்டியது.... அவளுக்கு பிடித்தமான வைரமுத்துவின் வரிகளைத் தேடிச்சென்றாள். அவள் வழமையாக புத்தகம் வாங்கும் "சூர்யா புக் சென்டர்".
அவள் வெகுநாளாய் தேடிய புத்தகம் அன்று அதிர்ஷ்ட வசமாய்க் கிடைத்தது;வாங்கிக் கொண்டாள். மிகுந்த மகிழ்வுடன் வைரமுத்துவின் வரிகளைத் தன்னுடன் அணைத்தவாறு சாலையின் ஓரமாய் சென்றுக் கொண்டிருந்தாள்.
அவள் வெகுநாளாய் தேடிய புத்தகம் அன்று அதிர்ஷ்ட வசமாய்க் கிடைத்தது;வாங்கிக் கொண்டாள். மிகுந்த மகிழ்வுடன் வைரமுத்துவின் வரிகளைத் தன்னுடன் அணைத்தவாறு சாலையின் ஓரமாய் சென்றுக் கொண்டிருந்தாள்.
திடுப்திப்பென்று அவள் மனதில் ஒரு கலக்கம். கைகள் விறைத்தன.
அவன் தந்த முத்தத்தின் சத்தம் அவளது காதுகளில் தேவாலய மணியாக ஒலிக்க ஆரம்பித்தது. அதுவரை அவள் உருவாக்கி வைத்திருந்த தைரியமும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் அற்றுப் போய் வீதியில் வெற்றிடமானாள்.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. உடல் கனத்தது போலிருந்தது. எல்லாம் மாயமாய் இருந்தது. அவளது கால்கள் அவளை பாதையில் இழுத்துச் சென்று கொண்டிருந்தன.

"சர்ர்ர்ர்ர்ர்......ர்ரர்...ர்ர்...ர்..."
"ஆஆஆஆஆஆஆ......................."
பத்து அடி தூரத்துக்கு அப்பால் கிடந்தாள்.
அவளைச்சுற்றிலும் அறிமுகமில்லா மனிதர்களின் நெரிசல். தூரத்தில் ஒரு இருச்சக்கரவண்டி அவளது கண்களில் மங்களாய்த் தெரிந்தது. அவளது கையிலிருந்த ஆசைப்புத்தகம் வண்டியை ஓட்டிவந்தவன் முகத்தில் வீசியெறியப்பட்டு கீழே விழுந்தது. அவன் அதனைக் குனிந்து எடுத்தவாறு தன்னை நோக்கி வந்து கொண்டிருந்தான். யாரென்று தெரியவில்லை. தலையிலிருந்து வழிந்து வந்த இரத்தம் அவளது கண்களைத் தானாய் மூடி கழுத்துக்கு வழிந்தது.

சுற்றி நின்ற சனம் வேடிக்கை தான் பார்த்ததே தவிர யாரும் அவளை நெருங்கவில்லை. அதுதானே நம் மக்களின் வழக்கம்! ஒருவன் மட்டும் நெருங்கிச் சென்றான். அவன்தான்... அவனேதான், இருசக்கர வண்டியால் அவளைத் தூக்கி எறிந்தவன். திக்குமுக்காடி நின்றான். விழுந்த தோரணையில் அவளது முகம் கூந்தலால் மறைபட்டுக்கிடந்தது. அவனது கைகள் நடுக்கத்தோடு அவளது கூந்தலை விலக்கின.
அவனது கண்கள் இரத்தச்சிவப்பாய் மாறின. அவனது கண்ணீர் அவளது கண்களில் படிந்த இரத்தத்தைக் கழுவியது.
"பிரணீ..........."
பறவைகள் அலண்டோடின... அவனது அலறல் சத்தம் வான் சென்று எதிரொலித்தது. நின்ற சனத்திடையே சலசலப்பு. அவளைத் தூக்கி தன் மடியில் கிடத்திக்கொண்டான். அவனது கைகள் அவளை உலுக்கின.
"பிரணீ.... பிரணீ...."
ஆம், அவன் கார்த்திக் தான்.
அவளைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டு கதறி அழுதான்.... விக்கி விம்மி அழுத அழுகுரலிடையே இரு இதயங்களின் துடிப்பை உணர்ந்தான்.
மறுபடியும்,
"பிரணீ... பிரணீ..."
அவளது கண் மெதுவாக அசைந்தது. குரலை இனங்கண்டு கொண்டாள். அவனை தன் கைகளால் இறுகப் பற்றிக்கொண்டாள். மெதுவாக கண் திறந்தது. இதழ்கள் துடிதுடித்தன.

"க்க்க்....கா....ஆ.....ர்த்திக்க்க்...."
"பிரணீதா நானே உன்ன இப்படி செஞ்சுட்டனே...." என்று சிலையானான்.
அவளது வலக்கை அவனது இடப்பக்க கன்னத்தை வருடியது.
"எனக்கு ஒரு முத்தம் தாரியா?"
அவளது இரத்தவெள்ள நெற்றியில் அவன் தன் இதழ்களால் முத்திரை பதித்தான்.
அந்த முத்தத்தின் சத்தம் அவளது காது வழியே சிதைந்த மூளையைச் சென்றடைந்தது.
"இது போதும்டா செல்லமே" என்று கஷ்டப்பட்டு சிரித்தாள்.
அவளது கைகள் மெதுவாக தரைக்கு நழுவின. தலை சாய்ந்தது.

அவளின் நெடுநாள் ஆசையை பிரபஞ்சம் நிறைவேற்றியது போல அவன் மடியிலேயே அவள் உயிர் பிரிந்தது.
அவனது கைவிரலை பிஞ்சு விரல்கள் பற்றி இழுத்தன... திரும்பிப் பார்த்தான்... புகைப்படத்தை வருடிக்கொண்டிருந்த அவன் விரலைப் பற்றி இழுத்த குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டான்.
"இது யாரு மாமா???"
அது அவனது தங்கையின் மகளாக இருந்தாலும் அக்குழந்தை அவன் கண்களுக்கு அவனது தேவதையாகவே தெரிந்தாள்.
இப்பொழுதெல்லாம் அவன் பிரணீதாவிற்கு பிடித்தது போல வாழ ஆரம்பித்துவிட்டான்..
நண்பர் சகவாசம் இல்லை;குடிக்கு அடிமை இல்லை;மீசை தாடியில் மோகம் இல்லை; ஊர் சுற்றுவது இல்லை.
நண்பர் சகவாசம் இல்லை;குடிக்கு அடிமை இல்லை;மீசை தாடியில் மோகம் இல்லை; ஊர் சுற்றுவது இல்லை.
அவளும் இல்லை.....!
அவனுடன் இருப்பது அவளது இரத்தக்கறை படிந்த புத்தகம் மட்டுமே...!!!
அவனுடன் இருப்பது அவளது இரத்தக்கறை படிந்த புத்தகம் மட்டுமே...!!!
☆பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்ய :
https://tamil.pratilipi.com/user/8e8a3971ag?utm_source=android&utm_campaign=myprofile_share
பிரவீனா-ஹட்டன்
0 Comments