Subscribe Us

header ads

கொரோனா மாத்திரை இல்லை கோரோசன மாத்திரை

 


தமில் மொழியில் 1914 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கைமுறை சித்த வைத்திய நூல் ஒன்றில் கொரோனாவுக்கு மருந்து தெரிவிக்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் சில பக்கங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.பாக்கெட் வைத்தியம் 61 ஆம் பக்கத்தில் "கோரோன மாத்திரை" என்ற பெயரில் இந்த மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அது "கோரோசன" என்ற சொல்லை "கோரோன" என்று  எடிட் செய்து பதிவிடப்பட்டிருக்கிறது. 


கோரோஜன/ கோரோசன மருந்து:

"கோ" பசு மாடு என்பது பொருள். பசுவிலிருந்து இருந்து எடுக்கப்படும் ஒரு பொருளைக்கொண்டு செய்யப்படும் மருந்து தான் இது. குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க இந்த மருந்து சித்தமருத்துவத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றது. நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்கவே இந்த மருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.இன்னும் கோரோஜன மருந்து நடைமுறையில் இருக்கின்றது.


"சித்தமருத்துவத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக யாரோ இதுபோன்று பெயரை மாற்றி வெளியிட்டிருக்கிறார்கள்; கோரோஜன மாத்திரை சாப்பிட்டால் கொரோனா வைரஸ் சரியாகாது" என்கிறார்கள் சித்தமருத்துவர்கள்.

Post a Comment

0 Comments